ஆத்தாடி…!!! ஜோதிகாவின் சொத்து இத்தனை கோடியா? டாப் ஹீரோக்களையே மிஞ்சிட்டாங்களேப்பா!

Author: Shree
18 October 2023, 10:53 am

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு முடிவுகட்டிய ஜோதிகா இப்போது 2.o வெர்ஷனில் இரண்டாவது இன்னிங்சில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனிடையே, தமிழில் பல படங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தும் வருகிறார் ஜோதிகா. பிரேக் எடுத்திருந்தபோது கூட சூர்யாவுடன் விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜோதிகாவின் சொத்து விவரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கும் ஜோதிகா ஆண்டுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.

படத்தில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் சூர்யாவுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் ஜோதிகா அதன் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கிறாராம். இது தவிர அவர் நடிக்கும் விளம்பரங்களுக்கு கணிசமான வருமானம் கிடைத்துவிடுகிறது. சென்னையில் 20000 சதுர அடியில் பிரம்மாண்டமான வீடு, மும்பையில் 70 கோடி மதிப்பிலான பிளாட், BMW கார்,Audi கார் என மொத்தம் ரூ 330 கோடி சொத்து வைத்திருக்கிறாராம். இது டாப் ஹீரோக்களை விட அதிகம் என்றே பேசப்படுகிறது. ஜோதிகாவின் சொத்து இத்தனை கோடி என்றால் சூர்யாவின் சொத்து கேட்டால் ஆடிப்போயிடுவீங்க ஆம், ரூ.3.571 கோடி சொத்துக்காரர் நம்ம சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
  • Close menu