‘சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா’ – ஜிம்மில் தீயாய் வொர்கவுட் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல்..!

Author: Vignesh
19 October 2022, 6:30 pm

44 வயதிலும் இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வரும் நடிகை ஜோதிகா, ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அஜித், விஜய், ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது நடிகர் சூர்யா மீது காதல் வயப்பட்ட ஜோதிகா, அவரையே கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் இல்லற வாழ்வில் கவனம் செலுத்தினார்.

jyothika-Jyothika-updatenews360

பின்னர் குழந்தைகள் பிறந்து, அவர்கள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட பங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தன் கணவருடன் சேர்ந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Jyothika-updatenews3602

அந்நிறுவனம் பல்வேறு தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா என்று சூர்யாவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் உருவானதற்கு முக்கிய காரணமே ஜோதிகா தானாம். கதை கேட்டு சூர்யா குழப்பத்தில் இருந்த சமயத்தில் இது ஒர்க் அவுட் அகும் என அவருக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தது ஜோதிகா தான். இவ்வாறு பல படங்கள் உள்ளன.

Jyothika-updatenews360 3

நடிகர் சூர்யாவுக்கு 47 வயது ஆனாலும் அவர் இன்றளவும் தனது உடலை செம்ம ஃபிட்டாக வைத்திருக்கிறார். அதேபோல் ஜோதிகாவுக்கும் தற்போது 44 வயது ஆனாலும் இன்றளவும் அவர் இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வருகிறார். இதற்கு காரணம் அவரது பிட்னஸ் தான். இந்நிலையில், ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார் ஜோதிகா. இதைப்பார்த்த ரசிகர்கள் சூர்யாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல என கமெண்ட் செய்து அவரை பாராட்டி வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 480

    0

    0