அட்ராசக்க… இளம் ஹீரோயின்களுக்கு ஈடாக கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்த ஜோதிகா!

Author: Rajesh
24 February 2024, 9:26 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

தற்போது இவர்கள் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். தற்போது பாலிவுட் படங்களில் கமிட்டாகி அங்கு பிசியாக இருந்து வரும் ஜோதிகா அவ்வப்போது உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வியக்க வைப்பார். இந்நிலையில் தற்போது கருப்பு மாடர்ன் உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளார். 45 வயசாகியும் இம்புட்டு அழகா இருந்தீங்கன்னா இளம் நடிகைகளின் நிலைமை என்ன ஆகுறது பாவம்? என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…