“கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்..” – நடிகை ஜோதிகாவின் திடீர் பதிவு வைரல்..!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 11:01 am

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

jyothika_Updatenews360

சந்திரமுகி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா.

jyothika_Updatenews360

தற்போது, சுமார் 25 வருடங்கள் கழித்து ஸ்ரீ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம். அந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜோதிகா நடிப்பதற்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. எனவே ஜோதிகா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கனத்த இதயத்துடன் ஶ்ரீ படத்தில் எனது பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைப் பெறுகிறேன் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

jyothika_Updatenews360
  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1257

    37

    9