திரைப்படத்துறையில் நடிகைகள் தங்களுக்கு தெரிந்த பாலியல் தொல்லைகளை குறித்து பொதுவெளியில் வந்து தற்போது வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் கேரள சினிமாவில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
ஹேமா கமிட்டி என்ற ஒரு குழுவை அமைத்து நடிகைகள் கொடுத்த பாலியல் புகார்கள் தற்போது அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்துவதோடு இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை கதாம்பரி ஜெத்வானி பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
அவர் கூறியுள்ள இந்த புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, ” ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரின் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியை சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்பவர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் எனது வீட்டிற்கு காவல்துறையினர் வந்து சோதனை செய்துவிட்டு என்னை கடத்தி சென்றுவிட்டார்கள்.
பின்னர் ஆந்திராவில் உள்ள அரசினர் மாளிகையில் யாருக்கும் தெரியாமல் அடைத்துவைத்து சித்திரவதை செய்தனர். காவல்துறை அதிகாரிகள் என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். அரசினர் மாளிகையில் சித்தரவதை செய்தபின் என்னை சிறையில் அடைத்தனர்.
கூடவே எனது பெற்றோர்களையும் சிறையில் அடைத்தனர். என் அப்பாவை பயங்கரமாக அடித்ததில் அவருக்கு காது கேட்கும் திறன் பறிபோனது. இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் இதை நான் தைரியமாக சொல்கிறேன். அவர்கள் மீது இப்போதைய முதலமைச்சர் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த புகாரை விசாரிக்க ஆந்திர அரசு ஸ்ரவந்தி ராய் என்ற ஏ.சி.பியை நியமித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள பாதிக்கப்பட்ட நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு….தற்போது மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதால், தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்று அழுதுகொண்டே பலருக்கும் நன்றி கூறினார்.
மேலும் இந்த இக்கட்டான சூழலில் தனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. ஆந்திர மாநில அரசு எனக்கு நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோல் இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என கண்கலங்கி பேசினார். இப்போது இந்த விவகாரம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.