பிரசவத்திற்கு பிறகு மீண்டும் கவர்ச்சிக்கு திரும்பிய காஜல் அகர்வால் … வைரலாகும் Hot photos!!

Author: Babu Lakshmanan
7 May 2022, 12:41 pm

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனார்.

இதைத் தொடர்ந்து, நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் படி புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை பிறந்ததையும், அதற்கு சூட்டியுள்ள பெயரையும் வெளியிட்ட காஜல் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், பிரசவத்திற்கு பிறகு முதல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் காஜல் அகர்வால். இதனை பார்க்கும் ரசிகர்கள், எப்படி போனீங்களோ.. அப்படியே வந்துட்டீங்க என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?