மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 2:39 pm
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
பின்னர் திருமணம் செய்த காஜல் குழந்தை பிறந்ததால் சினிமாவுக்கு சின்னதாக பிரேக் கொடுத்தார். அவர் நடிப்பில் இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
மகனுக்காக காஜல் செய்த செயல்
இதனிடையே பேட்டி ஒன்றி காஜல் அகர்வால் தனது மகனுக்காக செய்த செயலை பகிர்ந்துள்ளார். குழந்தை நீள் பிறந்த சமயம் தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருந்தேன்.
படத்தை தவிர்க்க முடியாமல் போனதால் திருப்பதியில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்து குக்கிராமத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
அந்த கிராமத்திற்கு குழந்தையை அழைத்து செல்ல முடியாத சூழல் உருவானதால் திருப்பதியில் எனது குழந்தை மற்றும் குடும்பத்தினரை தங்க வைத்தேன்.
இதையும் படியுங்க: இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!
படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் 2 மணி நேர பயண தூரத்தில் எனது வாகனத்தை நிறுத்தி தாய்ப்பால் எடுத்து தனது கார் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்புவேன்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பாலை எடுத்து மகனுக்காக கொடுத்து அனுப்பினேன். தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது என கூறினார்.
குழந்தை பெற்றால் அழகு போய்விடும் என நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் காஜல் அகர்வால் செய்த செயல் பாராட்டை பெற்று வருகிறது.