கர்ப்பிணியான காஜல் அகர்வால் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு !!

Author: kavin kumar
9 February 2022, 11:20 am

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் active ஆக இருக்கு நடிகை காஜல் அகர்வால் அண்மையில் துபாய் சென்றிருந்தார் . அவருக்கு அந்நாட்டு அரசு கோல்டன் விசா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் படி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Samantha Health Struggles மீண்டும் சமந்தாவை துரத்தும் கொடிய நோய்…இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 1161

    2

    0