எங்கடா இங்கிருந்த காஜல் அகர்வாலை காணோம்.. அடையாளம் தெரியாமல் மாறியதால் மிரண்டு போன ரசிகர்கள்..!

Author: Vignesh
2 February 2024, 9:08 am

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

kajal aggarwal - updatenews360

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும். மகனை பெற்றெடுத்த காஜல் உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.

இந்நிலையில், தற்போது ரீ என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்தும் போட்டோ சூட்டில் கவனம் செலுத்தியும் வரும்காஜல் அகர்வால் தற்போது, உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளதால் ரசிகர்கள் அவரது புகைப்படத்தை பார்த்து யார்ரா இது என கிண்டல் செய்து வருகின்றனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!