வீங்கிய முகத்துடன் இருக்கும் காஜல் அகர்வால்.. ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாங்களே..!
Author: Vignesh9 May 2024, 3:13 pm
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!
இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும்.
மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
இந்நிலையில், சமீபத்தில் காஜல் அகர்வாலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், இருக்கும் அவரின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.