பிரபல இயக்குனரால் கதறி அழுத காஜல் அகர்வால்.. இப்படித்தான் பட வாய்ப்பு வாங்கினாராம்..!
Author: Vignesh11 May 2024, 5:12 pm
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!
இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க்க அது இணையத்தில் வெளியாகும்.
மேலும் படிக்க: Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!
இந்நிலையில், சமீபத்தில் பேசிய காஜல் அகர்வால் தனது முதல் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் கூறுகையில் என்னை முதல் முதலில் தெலுங்கில் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்தில் நடிக்க அழைத்தார்கள். எனக்கு தெலுங்கு தெரியாது அதனால், எப்படி நடிக்க சொல்வார்கள் என்ற கேள்வி எனக்குள்ளே இருந்தது. அதனால், பதற்றத்தோடு உட்கார்ந்திருந்தேன். அந்த சமயத்தில், என்னுடைய அப்பாவும் என்னுடன் வந்திருந்தார். இயக்குனர் என்னை அழுது காட்டுங்கள் என்று சொன்னார். எப்படி அழுவது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது, என்னுடைய அப்பா ஒரு வார்த்தையை சொல்ல உடனே எனக்கு அழுகை வந்துவிட்டது. நீ ரொம்ப அழகா அழுதாய் என்று இயக்குனர் சொல்லி முதல் பட வாய்ப்பு எனக்கு கொடுத்தார். இப்படித்தான் எனக்கு அந்த முதல் பட வாய்ப்பு கிடைத்தது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.