அந்த இடத்தை டச் பண்ணப்போ.. நடிகை கஜோல் ஓப்பன் டாக்..!

Author: Vignesh
16 December 2023, 11:00 am

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

kajol updatenews360

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்போது 49 வயதாகும் கஜோல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து படு பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய நடிகை கஜோல், நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது எப்படி இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

kajol updatenews360

படங்களில் உடல் ரீதியாக மாண பங்கம் செய்யப்படும் காட்சிகள் நடிக்கவே மாட்டேன். நம்மை ஒருவர் தொடும்போது நாம் நடிகை என்ற மனநிலை ஒரு அளவிற்கு தான் இருக்கும் என்றும், எனக்கு மிகவும் அசௌகர்யமாக இருக்கும். உடலளவில் துன்புறுத்தல் அல்லது மாணபங்கம் போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் மோசமாக அருவருப்பாக எனக்கு தோன்றும் என்று தெரிவித்துள்ளார்.

kajol updatenews360

மேலும், அப்படியான காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு அது ரொம்ப மோசமான அனுபவத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல நடிகை என்று இந்த மாதிரி காட்சிகளில் நடித்து தான் காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. அதை நிரூபிக்க வேறு விதமான நூறு வழிகள் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 393

    0

    0