தனிமை உன்ன சுடுதா.. நினைவில் அனல் தருதா.. கூலா கவர்ச்சி கட்டும் Kalyani Priyadarshan..!
Author: Vignesh6 July 2023, 11:00 am
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.
இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் . என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது .
மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .