மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட… 7 வயதில் இருந்து கொடுமை அனுபவித்த கல்யாணி!
Author: Shree12 March 2023, 11:30 am
ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கல்யாணி. அந்த படத்திற்கு பின்னரும் இவர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் ரோஹித் என்பாரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகள் பெற்றார்.
32 வயதாகும் இவர் பார்ப்பதற்கு இன்னும் 10 க்ளாஸ் படிக்கும் பாப்பா போலவே இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் தான் விலகியது குறித்து சில நாட்கள் முன்னர் பேட்டியில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, 7 வயதில் இருந்து 26 வயது வரை குழந்தை நட்சத்திரம் தொகுப்பாளினியாக இருந்தேன் பின்னர் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது அப்போது என் அம்மாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றீங்களா? என கேட்டனர்.
அது புரியாத என் அம்மா, படப்பிடிப்பு தேதி தானே சார் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஆனால் அந்த நபர், அது இல்ல மேடம், மேனேஜர் கூட, தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்டு ஷாக்கான என் குடும்பத்தினர் இனி நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்து திருமணம் செய்து வைத்தார்கள் என்றார்.