பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

முன்னதாக, சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழில் இவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த சந்திரமுகி 2 படம் வரவேற்பை பெறவில்லை. படங்களின் தொடர் தோல்வியால் தற்போது, கங்கனா ரனாவத் அரசியல் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட இருக்கிறார். இதை கங்காவின் அப்பா உறுதி செய்து இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ‘ஈஸி மை டிரிப்’ இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டியுடன் புகைப்படம் எடுத்திருந்தார். அது வெளியாகி கிசு கிசுக்கப்பட்டது. தவறான தகவலை பரப்பாதீர்கள் நிஷாந்த் ஜிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. நான் வேறொரு டேட் செய்து வருகிறேன். அதை சரியான நேரம் வரும்போது நானே சொல்கிறேன். அதுவரை எங்களை இணைத்து வைத்து பேசாதீர்கள். ஒருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என்பதாலேயே அவருடன் இணைத்து பேசாதீர்கள் என கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.