உருகி உருகி காதலித்த 5 ஹீரோக்களுக்கு டிமிக்கி கொடுத்த சந்திரமுகி… எல்லோருமே நட்சத்திர நடிகர் தான்!

Author: Shree
30 August 2023, 11:08 am

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாய்காட் பாலிவுட்டில் இருந்து தனக்கு கொடுக்கும் டார்ச்சர்களையெல்லாம் தனியாளாக எதிர்த்து நின்று போராடி வருபவர் கங்கனா.

இவர் பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் , பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்.

கங்கனா ரனாவத் தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாகவே நடித்து வருகிறார். அதன் போஸ்டர்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தின் மூலம் தமிழில் முன்னி நடிகையாக கங்கனா இடம் பிடிப்பார் என நம்பலாம்.

இந்நிலையில் கங்கனா ரனாவத்திற்கு தற்போது 36 வயது ஆகிறது இன்னும் திருமணம் செய்யவில்லை. அவர் இதுவரை 5 பிரபலங்களை உருகி உருகி காதலித்து கழட்டிவிட்டு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 2009ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த Raaz படத்தில் நடித்தபோது அப்படத்தின் நடிகர் அதியன் சுமன் உடன் நெருக்கமாக காதலித்து வந்தார்.

அதன் பின்னர் பிரபல நடிகர் அஜய் தேவ்கானை சில வருடம் காதலித்தார். அவர் நடிகர் காஜலின் கணவர் என்பவது குறிப்பிடத்தக்கது. அவரை பிரிந்த உடனேயே பிரபல நட்சத்திர நடிகரும் உலக ஆண் அழகனுமான ரித்திக் ரோஷனை காதலித்தார். இந்த விஷயம் தெரியவர ரித்திக் ரோஷனின் மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டு பிள்ளை தனியாக கூட்டிச்சென்று வளர்த்தார்.

அதன் பின்னர் திரைத்துறைக்கு சம்மந்தமே இல்லாத ஒருவருடன் பழகி காதல் கல்யாணம் வரை சென்று நின்றுப்போனது. தற்போது கங்கனா மீண்டும் ஒருவரை காதலித்து வருகிறாராம் அவரை திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?