கையில் ரூ.2 லட்சம்.. 8 கிரிமினல் வழக்குகள்.. அவரே வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு..!
Author: Vignesh15 May 2024, 5:54 pm
பங்கா, ரங்கூன், குயின், தலைவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை கங்கனா ரனாவத். சினிமாவை தாண்டி அரசியல் கருத்துகளையும் இவர் துணிச்சலாக முன்வைத்து வருபவர். இதனால் அவருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், அதே அளவுக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.

மேலும் படிக்க: ‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!
முன்னதாக, சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகிறது. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழில் இவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த சந்திரமுகி 2 படம் வரவேற்பை பெறவில்லை. படங்களின் தொடர் தோல்வியால் தற்போது, கங்கனா ரனாவத் அரசியல் குதித்து இருக்கிறார்.
மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!
தற்போது, நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதாவது, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் வேட்பாளராக கங்கனா ரனாவத் களமிறங்கப்பட்டு இருக்கிறார். அதற்காக, அண்மையில் வேட்புமனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 12ம் வகுப்பு முடித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் கங்கனா, தனது பெயரில் 50 எல்ஐசி பாலிசிகள் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக 3 வழக்குகள் உட்பட 8 கிரிமினல் வழக்குகள் தன் மீது இருப்பதையும் கங்கனா உறுதிப்படுத்தி உள்ளார்.
தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டு அதில், அவர் 90 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து இருப்பதாகவும், 28 கோடி அசையும் செத்துக்களும், 62 கோடி அசையா செத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கையில் 2 லட்சம் வங்கி கணக்கில் ஒரு கோடி 35 லட்சமும் உள்ளதாம். இது தவிர 6.5 கிலோ தங்கம் 60 கிலோ வெள்ளி 3 கோடி மதிப்புள்ள 16 கேரட் வைர நகைகள் உள்ளதாம்.