முட்டி போட்டு பசங்களின் Mode-ஐ மாற்றும் கனிகா… இது லிஸ்ட்லயே இல்லையேமா என புலம்பும் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 4:08 pm

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது குட்டியான டிரவுசரை அணிந்து இராவான கவர்ச்சியை விருந்தாக படைத்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!
  • Close menu