உலக அழகி நான்தான்.. பூம் பூம் பூம் மாட்டுக்காரா.. பாடலில் வந்த நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் க்ளிக்..!

Author: Vignesh
2 February 2024, 12:15 pm

பொதுவாக கோலிவுட் சினிமாவில் நிறைய நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். இப்போதும், மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டு நடித்து வருகிறார்கள். சிலர் ஒரு சில படங்களிலே காணாமல் போய்விடுகின்றனர். அப்படி இப்போதும், நாம் படங்களில் பார்த்த ஒரு நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

karthika

தமிழில் அதிக கிளாமர் காட்டாமல் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் கார்த்திகா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர். 2007 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் நாளைய பொழுது உன்னோடு என்ற இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

karthika

ராமன் தேடிய சீதை ,மதுரை சம்பவம், வைதேகி, தைரியம், 365 காதல் கடிதங்கள் எனத் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கி வந்தார். பல படங்களில் நடித்தாலும் உலக அழகி நான் தான் என்ற பாடலில் இவரை மிகவும் பிரபலமாக்கியது. அடுத்தடுத்து, பட வாய்ப்புகளுடன் பிசியான நடிகையாக வளம் வந்த இவர் 2012க்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இந்த நிலையில், நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karthika
  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!