அந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம்..! அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
22 February 2023, 7:45 pm

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

kasthuri-shankar02 updatenews360

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

kasthuri shankar - updatenews360

அவர் முகத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை காட்டிய படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

kasthuri shankar - updatenews360
kasthuri shankar - updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 553

    1

    0