ஹோட்டலில் ஜாலி பண்ணிட்டு ரூ. 41 ஆயிரம் அபேஸ் பண்ண கஸ்தூரி? காண்டாகி கண்டமேனிக்கு திட்டி ட்வீட்!
Author: Shree15 July 2023, 8:17 pm
சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் நடித்து வரும் கஸ்தூரி அரசியல் குறித்தும், சமூக அவலங்களை குறித்து ஏதேனும் சர்ச்சையாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் ஏடாகூடமாக எதையேனும் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகுவார். இதனாலே இருக்கு ட்விட்டர் கஸ்தூரி என கிண்டல் பெயர் வைத்தனர் நெட்டிசன்ஸ்.
அந்தவகையில் தற்போது, ஒரு நபர் நடிகை கஸ்தூரி ஹோட்டலில் ஜாலியாக நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டு, 2017ல் லீலா பேலஸ்-ல் பார் பில் 41 ஆயிரம் கட்டாமல் எஸ்கேப் ஆனதாக டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து கடுப்பான கஸ்தூரி அது ஒரு கல்யாணத்திற்கு நான் என் சகோதரியுடன் சென்று டான்ஸ் ஆடியது என விளக்கம் கூறி படு மோசமாக அந்த நபரை கெட்ட வார்த்தைகளால் திட்டி பதிலடி கொடுத்துள்ளார். இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Night club🍸👯🎶 pic.twitter.com/MgVcyUQzJS
— Roshan (@Roshanrules67) July 13, 2023