பிக் பாஸ் என்பது ஒரு Fake Show – வெளுத்து வாங்கிய கஸ்தூரி..!

Author: Rajesh
1 February 2022, 4:21 pm

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

தொடங்கியது முதலே பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் பரபரத்துக்கொண்டிருக்கிறது பிக்பாஸ். வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3ல் எப்படி இருந்தாரோ அதே போன்றே தற்போதும் இருந்து வருகிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் பங்கேற்கவில்லை எனக் கேட்டவருக்கு கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.

“எனக்கு குடும்ப இருக்கு, வேலை இருக்கிறது. இந்த fake ஷோவுக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக இந்த கயமந ஷோ டிவி பின்னால் paymentக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்காவது கொண்டு செல்லுங்கள்’ என கஸ்தூரி காட்டமாக கூறி இருக்கிறார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!