தமிழ் சினிமாவின் 90ஸ் காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் வென்ற கஸ்தூரி அதன் பின்னர் திரைத்துறையில் நுழைந்து ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 48 வயதாகும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையான விஷயத்தில் மூக்கை நுழைத்து விமர்சிக்கப்படுவார். அதுமட்டும் அல்லாமல் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டி முகம் சுளிக்க வைப்பார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது சேலையில் குடும்ப குத்துவிளக்கு போன்று கொஞ்ச கிளாமர் எக்ஸ்பிரஷன் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர் ஒருவர் , செல்லம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டுள்ளார். அதற்கு சட்டென ரிப்ளை செய்த கஸ்தூரி , கல்யாணத்துக்கு என் கணவர் மற்றும் குழந்தைகளெல்லாம் வருவாங்க பரவாயில்லையா? என கேட்டு நோஸ்கட் செய்துள்ளார்.