அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌசல்யா நான் திருமணத்தை எதிர்பார்ப்பவள் இல்லை என்றும், என்னுடைய கருத்திற்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் தான் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார்.
ஆனால், சில காரணங்களால், பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனக்கு விஜயுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் படம் மிகவும் பிடித்த படம் விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா தெரிவித்துள்ளார்.
முதல்லில், விஜய்யை நேருக்கு நேர் படத்தின் செட்டில் தான் பார்த்தேன். அப்ப அவர் மிகவும் பணிவான ஒரு மனிதராக நடந்து கொண்டார். எனக்கு டயலாக் வராது. அதனால், நான் நிறைய டேக் வாங்கினாலும் அவர் என்னை திட்ட மாட்டார். சலித்துக் கொள்ளவும் மாட்டார். எனக்கு உதவி செய்வார். இல்லையென்றால், அமைதியாக இருப்பார். ஒரு முறை நானும் விஜயும் டயலாக் ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தோம். விஜய் சத்தமாக டயலாக் சொல்லி ப்ராக்டிஸ் செய்வார். நான் மனசுக்குள்ளேயே சொல்லி பிராக்டிஸ் செய்வேன். அப்போது இயக்குனர் வசந்த் சார் என்னிடம் சொன்னார் விஜய்யை பார்த்து அதே போல பிராக்டீஸ் பண்ணுங்க அப்போ உங்களுக்கு டயலாக் சரியா வரும் என்று சொன்னார். அவரைப் போல பிராக்டிஸ் செய்த பிறகுதான் எனக்கு டயலாக் சரியாக வர ஆரம்பித்தது என்று கௌசல்யா தெரிவித்துள்ளார்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.