எல்லாத்துக்கும் காரணம் அந்த நோய் தான்.. பிரேக் அப் குறித்து மனம் திறந்த கௌசல்யா..!
Author: Vignesh6 September 2023, 2:48 pm
அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌசல்யா நான் திருமணத்தை எதிர்பார்ப்பவள் இல்லை என்றும், என்னுடைய கருத்திற்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் தான் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார்.
ஆனால், சில காரணங்களால், பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். மேலும், நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டு இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை அதிகமாகி விட்டது.
இந்த விஷயத்தால், சினிமாவில் இருந்து விலகி விட்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனக்கு விஜயுடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் படம் மிகவும் பிடித்த படம் விஜய் தான் என்னுடைய க்ரஷ் என்று கௌசல்யா தெரிவித்துள்ளார்.