ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் மிகச்சிறந்த நடிகையான கயல் ஆனந்தி தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இதுதான் அவரது முதல் திரைப்படம். அதை அடுத்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பொறியாளர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் .
மேலும், கயல் திரைப்படத்தின் மூலமாக அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். ஒட்டுமொத்த சினிமாவும் அவரை திரும்பி பார்த்தது. அந்த அளவுக்கு கயல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் புகழும் தேடி கொடுத்தது.
தொடர்ந்து தமிழில் விசாரணை, சண்டி வீரன், தித்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.
இதனிடையே கயல் ஆனந்தி சாக்ரடிஸ் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதையும் படியுங்கள்:அரவிந்த் சாமியின் மகனா இது? ஹேண்ட்ஸம் லுக்கில் அழகா இருக்காரேப்பா – ட்ரெண்டாகும் போட்டோஸ்!
அதாவது, கயல் ஆனந்தி தன்னுடைய மகனுக்கு No Caste என்ற சான்றிதழ் வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர் இந்த புரிதல் எனக்கு மட்டும் இல்லை என்னுடைய கணவர் வீட்டிலேயும் அனைவருக்கும் இருக்கு என மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
This website uses cookies.