கீர்த்தி சுரேஷ்-அ இது.? – செம டான்ஸ்..! வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Author: Rajesh
22 February 2022, 11:13 am

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.  

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை ரசிப்பதற்கென்றே ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கிடக்கிறது. இந்த நிலையில்,  தற்போது டான்ஸ் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்மயா ஆடுறீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?