தங்கச்சியா நடிச்சது ஒரு குத்தமா…! வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்.?

Author: Rajesh
31 January 2022, 6:14 pm

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவருக்கு, ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். இப்படம் ரஜினிக்காக வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான இரண்டு படங்களை வேண்டாம் என ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நானி மற்றும் சாய்பல்லவி நடித்திருந்தார்கள். முதலில் சாய்பல்லவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது.
இதனிடையே மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், ரஜினியின் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த இரண்டு பிரமாண்ட படங்களை நழுவ விட்டதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ். விடுமா விடுமா கிடைக்க வேண்டியது இருந்தா கண்டிப்பா கிடைக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்களாம்..

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!