சாய்ஞ்சுக்கிட்டு High Pitch-ல பாடி அசத்திய கீர்த்தி சுரேஷ் !

Author: Rajesh
22 July 2022, 10:33 am

கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய இன்னொரு திறமை இன்று வெளிப்பட்டுள்ளது. ஒரு மலையாள பாட்டு எடுத்து அவ்வளவு அழகாக High Pitch-ல பாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவர் ஏற்கனவே சாமி 2 படத்தில் விக்ரமுடன் சேர்ந்து பாடியது கூடுதல் தகவல்.

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.

https://vimeo.com/732344204
  • Aamir Khan Inroduce his 3rd lover 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!