கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த காஸ்ட்லி சேலை.. விலையை கேட்டா தலையே சுத்துதே..!

Author: Vignesh
30 July 2024, 5:42 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய நடிப்பில் அடுத்தபடியாக ரகு தாத்தா படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.

ரகு தாத்தா படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் விளம்பரப்படுத்தும் போது ஃப்ளோரல் புடவை அணிந்து வந்திருந்தார். அவரின் போட்டோக்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. ஃபேஷன் உலகில் தற்போது ஃப்ளோரல் புடவைகள் தான் வருகின்றன.

keerthy suresh - updatenews360

பல்வேறு பிரபலங்களும், இந்த புடவை அணிந்த வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ஃப்ளோரல் புடவை அணிந்திருக்கும் போட்டோக்கள் வெளியானது.

நேர்த்தியாக கைவினை திறனுக்காக அறியப்பட்ட புகழ்பெற்ற Torani நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புடவையை கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்தார். கருப்பு நிறத்தில், உருவாக்கப்பட்ட இந்த புடவை மஞ்சள், பச்சை, பிங்க் மற்றும் சிவப்பு என மல்டி கலரில் பெரிய பெரிய மலர் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த இந்த ப்ளோரல் சேலையின் விலை 61 ஆயிரம் ஆகும் நகைகளை பொருத்தவரை வெள்ளை நிற மூக்குத்தி, முத்துச்சோக்கர் அணிந்திருந்த அவர் மிக குறைவான மேக்கப்புடன் கோல்டன் ஐஷாடோ லேசான லிப்ஸ்டிக்கில் இருந்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ