கோடி கணக்கில் சொகுசு கார்கள்… பங்களா வீடு – தலைமுறைக்கும் தாங்கும் கீர்த்தி சுரேஷின் சொத்து!
Author: Rajesh9 February 2024, 2:15 pm
அழகு நடிகையாக, ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மகாநடி படத்தின் இவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது.அப்டத்திற்காக தேசிய விருது வாங்கி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தார்.
தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் பிளாப் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். இதனிடையே விஜய் , அனிருத், குடும்ப நண்பர் என அவ்வப்போது யாருடனாவது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே பாலிவுட் வாய்ப்பிற்காக தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் ரொம்பவே விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து விஜய்யுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு குறித்த வ விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷிற்கு சென்னையில் ரூ. 6 கோடியில் பெரிய பங்களா Brand-new Volvo S90 – ரூ. 60 லட்சம், BMW 7 Series 730Ld – ரூ. 1.38 கோடி, Mercedes Benz AMG GLC43 – ரூ. 81 லட்சம்,Toyota Innova Crysta – ரூ. 25 லட்சம் என பல வகையான கார்கள் வைத்துள்ளார். இது தவிர. விளம்பரங்களில் நடித்து கணிசமான வருமானம் ஈட்டி வருகிறார். ஆக மொத்தம் கீர்த்தி சுரேஷிற்கு ரூ.45 கோடி சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.