சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே.. காதல் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்..!
Author: Vignesh9 August 2024, 9:38 am
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் இப்படத்தினை தொடர்ந்து, ரஜினி முருகன் ரெமோ, தொடரி, பைரவா, மகாநடிகை, சர்க்கார், அண்ணாத்தை, சாணிக்காகிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டிலும் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண்தவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதால், அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளினி கீர்த்தி சுரேஷ் நீங்கள் தனியாக சிங்கிளாக இருக்கிறோமே என்று எப்போதாவது பீல் செய்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதிலிருந்து கீர்த்தி சுரேஷ் சிங்கிள் இல்லை என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில், நான் சிங்கள் இல்லை பெற்றோருடன் தான் இருக்கிறேன் என்ற நோக்கத்தில் தான் அவர் சொல்லியிருப்பார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.