அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு.. பகீர் கிளப்பிய கீர்த்தி சுரேஷ்..!

Author: Vignesh
6 January 2024, 5:19 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

keerthy suresh - updatenews360

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்றும் வருகிறார்.

keerthy suresh - updatenews360

அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் கடிதங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒருவரிடம் இருந்து தொடர்ந்து காதல் கடிதங்கள் வந்து கொண்டு இருந்ததாகவும், கல்யாணம் பண்ணனும்னு சொல்லி முகவரியோடு சேர்த்து காதல் கடிதத்தை போட்டுள்ளார் அந்த நபர். அவர் என்கிட்டே இருந்து பதில் எல்லாம் எதிர்பார்ப்பார்.

keerthy suresh - updatenews360

மற்றொருவர் சிறிது நாட்களுக்கு முன்பு வீடு தேடி வந்து விட்டாராம். அவர் வேறு மாதிரி இருந்ததாகவும், தான் அப்போது இல்லாத சமயத்தில் வேலையாட்களிடம் தன் கணவராக நினைத்து ஏன் அவ அப்படி பண்றாள் அந்த படம் எல்லாம் பண்றாள் என்று கூறியதாகவும், கேரளாவில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டதாகவும், மேலும் சென்னையில் உள்ள வீட்டில் வந்து எதுக்கு உதயநிதி கூட படம் பண்றாள் என்று கேள்வி எழுப்பி சண்டையிட்டதாகவும், இவர்கள் செய்வதை பார்த்தால், யாருடா நீங்கன்னு கேட்க தோன்றியதாகவும், அந்த விஷயத்தை உதயநீதியிடமே கூறியதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில், தெரிவித்து இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 333

    0

    0