ரொமான்ஸ் வரும் போது இந்த நடிகரை தான் நினைப்பேன்.. சுந்தர்.சி பக்கத்துலயே வெச்சுட்டு இப்படியா..?
Author: Rajesh2 April 2023, 12:20 pm
தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருபவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஜெயராமன், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முறைமாமன். இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சி-க்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே ஏராளமான பேட்டிகளில் கணவர் சுந்தர்.சியை பற்றி குஷ்பூ பேசியுள்ளார். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தாலும் சுந்தர்.சிக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியாது. அதுவும் ரொமான்ஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்து ஆர் என்பது கூட தெரியாது என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில், நடிகை சுஹாசினி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மோஸ்ட் ரொமான்ஸ் விருது யாருக்கு கொடுக்கப்படலாம் என கேட்கப்பட்டது.
அதற்கான ஆப்ஷன்ஸ் நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் கார்த்திக், சுந்தர்.சி ஆகியோரின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த குஷ்பூ சந்தேகமே இல்லை, நடிகர் கார்த்திக் தான், எனக்கு ரொமான்ஸ் வரும் போதெல்லாம் ஐ லவ் கார்த்திக் என்று சொல்லிவிட்டு அவரின் புகைப்படத்தை பார்த்து முத்தமும் கொடுத்தார். கார்த்திக்கின் போட்டோ அருகில் சுந்தர்.சி புகைப்படமும் இருந்தது, ஆனால் அதனை கண்டுகொள்ளவே இல்லை.