திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானதால் சித்தார்த்தை அவசரமாக கரம்பிடித்த கியாரா அத்வானி..? வைரல் ட்வீட்..!
Author: Rajesh12 February 2023, 7:30 pm
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியான சித்தார்த்த் மல்கோத்ராவும், கியாரா அத்வானியும், பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி, கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்கோத்ரா.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சித்தார்த் – கியாராவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மேலும், திருமணம் முடிந்த கையோடு தன் காதல் மனைவி கியாராவை சித்தார்த் டெல்லிக்கு அழைத்து சென்றார்.
தற்போது சித்தார்த்தின் பெற்றோர் வீட்டில் இருவரும் தங்கி உள்ள நிலையில், தன் காதல் மனைவிக்காக மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறாராம். இந்நிலையில், கியாரா அத்வானி கர்ப்பமானதால் தான் அவசர, அவசரமாக திருமணம் நடந்ததாக பேச்சு கிளம்பிய நிலையில், கியாராவின் ரசிகர்கள் கோபம் அடைந்து விளாசினார்கள்.
தற்போது, பாலிவுட் பிரபலமும் விமர்சகருமான கமால் ஆர். கான் (கே.ஆர்.கே.) கியாரா அத்வானியின் பெயரை குறிப்பிடாமல், “கர்ப்பமான பின்னர் திருமணம் செய்துகொள்வது பாலிவுட்டில் புது டிரெண்டாக உள்ளது. பாலிவுட்டில் அண்மையில் நடந்த திருமணமும் கூட இதே ஃபார்முலாவை தான் பாலோவ் செய்துள்ளார்கள். நல்லது” என ட்வீட் செய்துள்ளார்.
இதனை சிலர் பகிர்ந்து வைரல் செய்து வரும் நிலையில், இன்னும் சிலரோ, அவர் பப்ளிசிட்டிக்காக இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வருவதாக விமர்சித்து வருகின்றனர்.