டிஸ்யூ பேப்பரை எடுத்து.. கமல் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்லை பதறிய நடிகை..!
Author: Vignesh2 March 2024, 7:44 pm
அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி, பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகைகளுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மவுஸ் தேடிக்கொண்டு பின்னர் கிடைக்கும் ஐட்டம் டான்ஸ், குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். அப்படித்தான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட்.
முதல் படமே மாபெரும் ஹிட் அடிக்க தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.
இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளத்தில் படு மோசமான ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வரும் கிரண் ரதோட் சமீபத்திய பேட்டி ஒன்றில், சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். அதில், சமூக வலைத்தளங்களில் தனக்கு மூன்று முறை திருமணம், குழந்தைகள் இருக்கிறது என்று பல பொய்யான தகவல்கள் பகிரப்பட்டதாகவும், ஜெமினி படத்தில் நடித்து ஒரே நைட்டில் பிரபலம் ஆகிவிட்டேன். தான் காதலிக்கும் சமயத்தில் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஆனால், அதில் நடிக்க மறுத்துவிட்டேன். காரணம் திருமணம் செய்துவிட்டு சினிமாவிலிருந்து விலகலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நான் தவறான நபரை காதலித்து விட்டேன். அவர் என்னை ஏமாற்றியும் விட்டார். சினிமாவில், மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடிய போது தான் பல கசப்பான அனுபவங்களை சந்தித்து இருக்கிறேன். நண்பர்களாக பழகியவர்கள் நைட்டுக்கு போன் செய்து அந்த விஷயத்திற்கு அழைப்பார்கள். அந்த மாதிரி கசப்பான அனுபவங்கள் பல உண்டு. அப்போதெல்லாம், மிகவும் மன உளைச்சலில் என்ன செய்வது என்று புரியாமல் அழுது கொண்டிருப்பேன் என்று கிரண் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும், கமலின் அன்பே சிவம் படத்தில் நடித்தது குறித்து பேசியபோது அதில், அவர் அன்பே சிவம் படத்தில் நான் அதிகமாக மேக்கப் போட்டுக் கொண்டு போய் நின்றேன். அப்போது, அங்கே கமலஹாசன் இப்படி எல்லாம் இருக்கவே கூடாது இவ்வளவு மேக்கப் எல்லாம் இந்த படத்துக்கு செட் ஆகாது என்று கூறி ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து சுத்தமாக துடைத்து விட்டார். கமல் இப்படி பண்ணுவார் என்று நினைக்கவே இல்லை நான் பதறிவிட்டேன் என கிரண் தெரிவித்துள்ளார்.