தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2025, 9:53 am
அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதால் சின்ன சின்ன படங்கள் பொங்கலுக்கு வெளியாக வரிசை கட்டி நிற்கின்றன.
அந்த வரிசையில் கிருத்திகா உதயநி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படம் வெளியாக உள்ளது.
இதற்காக நேற்று இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்திற்கு ஏ,ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். என்னை இழுக்குதடி பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படியுங்க: அதிகாலையில் விஜய்க்கு வந்த மரண ஓலம்… பரிதாபமாக பலியான தவெக நிர்வாகி!
இந்த நிலையில் விழாவில் திடீரென இயக்குநர் மிஷ்கின் வருகை புரிந்தார், இதைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் நித்யா மேனன், இயக்குநருக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மிஷ்கினை பார்த்து கத்திய நித்யா மேனன், நலம் விசாரித்தா. அப்போது நித்யா மேனனின் கைகளை பிடிக்க வந்த மிஷ்கினை, தயவு செய்து என்னை தொடாதீங்க என கூறினார்.
மிஷ்கினுக்கு முத்தமிட்ட நித்யா மேனன்!
— IndiaGlitz – Tamil (@igtamil) January 7, 2025
தயவு செஞ்சி என்னை தொடாதீங்க! pic.twitter.com/ivwzqyJJOf
உடனே மிஷ்கின் கன்னத்தை காட்ட, நித்யாமேன் அன்பாக முத்தம் கொடுத்தார். பதிலுக்கு நித்யா கைகளை பிடித்து மிஷ்கின் முத்தம் கொடுத்தார். ஏற்கனவே மிஷ்கினின் சைக்கோ படத்தில் நித்யா மேனன் முக்கிய நடிகையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.