நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!
நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.
கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.
மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!
மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், 58 வயதை கடந்த நிலையில் கோவை சரளா திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாகவே இருந்து வருகிறார். இவரது குடும்பத்தின் மூத்த மகளான கோவை சரளா, உடன் பிறந்த நான்கு சகோதரிகளின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளார். மேலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் கோவை சரளாதான் கவனித்துக் கொண்டார். மற்றவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்நாளை செலவிட விரும்புவதாக கோவை சரளா தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.