அந்த நடிகருக்கு Kiss கொடுக்கனும்.. நடிகை குஷ்பு சொன்ன அந்த விஷயம்.!

Author: Rajesh
4 June 2022, 12:24 pm

குஷ்பு தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றும் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சமீபத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து உடல் எடையை முற்றிலும் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கமல் விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரது நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் ஆன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்த நிலையில், நடிகை குஷ்பு விக்ரம் படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது எல்லாரும் நல்லா நடிச்சு இருக்காங்க, விஜய் சேதுபதியை திட்டனும் போல இருக்கு, பஹத் பாசில் முத்தம் கொடுங்கன்னு கூறினார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!