தோலுக்கு மேல் வளர்ந்த லைலாவின் இரண்டு மகன்கள்.. தமிழ் சினிமா ஹீரோ ஆவார்களா?..
Author: Vignesh13 May 2024, 12:45 pm
தமிழ் சினிமா ரசிகர்களை தன் குழந்தை போன்ற எக்ஸ்பிரஷன் கியூட்டான பேச்சு உள்ளிட்டவற்றால் கவர்ந்திழுத்தவர் நடிகை லைலா. இவர் தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்து நல்ல பெயர் வாங்கிய லைலா 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேலும் படிக்க: Insecure ஆக இருந்துச்சு.. மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா..!
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார். சில வருடங்கள் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் நடித்தார். அடுத்ததாக விஜய்யின் 68வது படத்திலும் கமிட்டாகியுள்ளார். தளபதி 68 பூஜை புகைப்படத்தில் லைலா இடம்பெற்றிருந்தது பேசுபொருளாக மாறியது.
மேலும் படிக்க: என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்..!
இந்நிலையில், நேற்று அன்னையர் தினம் என்பது பல பிரபலங்கள் தங்களது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறு, தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை லைலா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைனாவிற்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கிறார்களா என்றும், மேலும், இவர்கள் தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் ஆவார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.