தொப்பை வந்துடுச்சே.. Feel பண்ணி வீடியோ போட்ட லட்சுமி மேனன்.. ரசிகர்கள் ஷாக்.!

Author: Rajesh
7 June 2022, 4:53 pm

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். இந்நிலையில் தற்போது லக்ஷ்மி மேனன் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தனக்கு தொப்பை வந்திருப்பதை காட்டி இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu