லட்சுமி மேனனின் மார்க்கெட்டை காலி செய்த விஷால்… இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா?

Author: Shree
30 May 2023, 11:39 am

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

Vishal-and-Lakshmi-Menon

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி மேனன் நல்ல மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக இருந்தும் அவரது கெரியரை காலி செய்ததே நடிகர் விஷால் தானாம். ஆம், இவர்கள் இருவரும் இணைந்து பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்கள். இதனால் லட்சுமி மேனன் மீது மக்களுக்கு இருந்த அபிப்ராயம் குறைத்து அவரது சினிமா கெரியரே காலி ஆகிவிட்டது.

  • இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!