வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது தனிப்பட்ட விருப்பம்.. நானும் பல.. லதா ராவ் OpenTalk..!
Author: Vignesh4 March 2024, 7:42 pm
லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பிடத்தை காட்டி உருக வைக்கிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய லதாராவ் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள்.
இது மீடியா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இப்படித்தான் இருந்து வருகிறது என்றும், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் குறிப்பிட்ட அந்த நடிகைகளை பொறுத்தது என்றும், அட்ஜஸ்ட்மென்ட் விசயத்தால் நானும் பல பட வாய்ப்புகளை இழந்து உள்ளேன். அந்த இயக்குனர் மற்றும் படம் குறித்து தான் பேச விரும்பவில்லை என்று லதாராவ் தெரிவித்துள்ளார்.