நடிக்க வந்ததுக்கு பதிலா அந்த தொழில் செஞ்சு சம்பாதிச்சு இருக்கலாம்.. நடிகை லாவண்யா தேவி ஓபன் டாக்..!

Author: Vignesh
22 March 2024, 6:32 pm

சினிமா துறையில் நடித்தும் பெரிய இடத்தினை பிடிக்காமல் தமிழ் சினிமாவில் காணாமல் போன நட்சத்திரங்கள் பலர் இருக்கின்றனர். அதன்படி, கிட்டத்தட்ட 1997 சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்து தற்போது, வரை இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் காணாமல் போய் இருக்கிறார் நடிகை லாவண்யா தேவி.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர். படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தலைநகரம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் பெரிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

Lavanya Devi

அதன் 2014 ல் நான் தான் பாலா படத்தில் கடைசியாக நடித்து சினிமாவிலிருந்து விலகிவிட்டார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பகாசுரன் படத்தில் நடித்திருந்தார் நடிகை லாவண்யா ரவி. மேலும், ஒரு சில சீரியலில் நடித்தும் வருகிறார்.

மேலும், ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆனதாகவும், சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் என்றும், பல படங்களில் நான் நடித்த சில காட்சிகள் படம் வெளியாகி பார்க்கும்போது இருக்காது என்றும் கூறியிருக்கிறார்.

Lavanya Devi

மேலும், சங்கமம் படத்தின் போது ரகுமான் சார் பாவம் அப்படத்தின் ஆட்டம் ஆடும் காட்சியில் எனக்கு கண்ணில் மண் பட்டு இன்பெக்சன் வந்தது. கேரவன் அந்த காலத்தில் இல்லாத போது ஆடை மாற்றும் போது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடு போல வேஷ்டிகளை கட்டி இருக்கும் அங்கதான் ஆடை மாற்றுவோம். அதன் பின்னர் தான் இந்த கஷ்டத்தை பார்த்து மணிவண்ணன் அவரது கேரவன் எடுத்து வந்து எங்களை மாற்ற சொல்வார்.

பல படங்களில் ஓபன் ஆன இடத்தில் தான் பயந்து கொண்டே ஆடை மாற்றுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும், பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். பெரிய படங்களில் கேட்கவில்லை. சிறு சிறு பட்ஜெட் படத்தில் தான் கேட்டார்கள். ஆனால், சில கண்டிஷன் போடுவார்கள். கிளாமராக நடிக்கணும் என்று தான் கேட்பார்கள் என்றும், லாவண்யா தெரிவித்துள்ளார்.

Lavanya Devi

சினிமாவுக்கு வந்ததால் பொருளாதாரத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நல்லா படித்திருந்தால் ஆபீஸ்லாவது போய் அல்லது ஏதாவது தொழில் செய்து சம்பாதித்து இருக்கலாம் என்று தோன்றும். ஆனால், இந்த மாதிரியான ஒரு ஃப்ரேம் எனக்கு கிடைத்திருக்காது என்றும் ரொம்ப வருத்தப்பட்டது எல்லாம் கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 686

    0

    0