வேணுமா…? பிடிச்சா அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணு – போர் தொழில் நடிகை லிசா சர்ச்சை பேட்டி!
Author: Shree7 July 2023, 10:43 am
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் போன்ற பலர் நடித்து கடந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்த படம் போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் இப்படத்தின் கதை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
த்ரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுக்கு போட்டியாக சுனில் சுகாதா வில்லனாக மிரட்டினார். மலையாள நடிகையயான நிகிலா விமல் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்கில் ஓடியது.
இந்நிலையில் இப்படத்தின் சிறிய ரோல் ஒன்றில் லிசா சின்னு என்பவர் நடித்திருப்பார். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார். அதன் பின்னர் சினிமா பி.ஆர் ஆக தனது வேலையை செய்துவந்துள்ளார். இந்நிலையில் போர் தொழில் படத்தில் நடித்ததை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய லிசா, “சினிமாவில் பி.ஆர்., தான் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். என்னிடம் அப்படி நிறையபேர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கு அந்த மாதிரி நடப்பது தெரியவில்லை. அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கு..இல்லைன்னு சொல்லமாட்டேன்.
நாம் ஓகே சொன்னால், ஓகே தான். இல்லை என்றால் இல்லை, அவ்வளவு தான். அந்த நேரம் அடெஸ்ட்மெண்டிற்கு நீங்கள் மறுத்தால் உங்கள் வாய்ப்பு போகலாம். அதற்காக வருத்தப்படக் கூடாது. தொடர்ந்து நாம் முயற்சி செய்துக்கொண்டே இருந்தால் என்றாவது ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும். எனவே பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டு, அதன் பின் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், பிடிக்கவில்லை என்று தவிர்ப்பது நல்லது என அவர் கூறினார்.