வாவ்.. 80களில் கலக்கிய நடிகை மாதவியின் மகள்களா இது? அழகுல அம்மாவையே மிஞ்சிட்டாங்களே..!

Author: Vignesh
31 January 2024, 7:00 pm

தமிழ் சினிமாவில் நடிகை மாதவி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்தவர். புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1980ம் ஆண்டு நடிகை மாதவி தமிழில் அறிமுகமானார். ரஜினி மற்றும் கமலுடன் பல படங்களிலும் நடித்துள்ளார்.

madhavi -updatenews360

நடிகை மாதவி தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இதனிடையே, தொழிலதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை 1996ம் ஆண்டு நடிகை மாதவி திருமணம் செய்து நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர்.

madhavi -updatenews360

இதனிடையே, தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் உச்சத்தில் இருந்த இவருக்கு தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்கள் தொர்ந்து தேல்வியடைந்ததால், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த மாதவி, தனது தோழரான ரஜினியிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். ரஜினியோ இமய மலையில் இருக்கும் தன் குரு ஒருவரை சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

madhavi -updatenews360

இதனால், மாதாவி இமய மலை சென்று குருவை பார்க்க, அவரோ மாதவியை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துகிறார். அமெரிக்காவில் தொழிலில் நஷ்டமாடைந்த ஒருவரை மாதவி திருமணம் செய்து கொண்டார். இனி 30 ஆண்டுகள் உன்னால் இந்தியாவிற்கு வர முடியாது என்று அந்த குரு கூறியுள்ளார்.

madhavi -updatenews360

மாதவி முதலில் இதை நம்பவில்லையாம். ஆனால், குரு சொன்னது போலவே நடந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கணவரின் தொழிலும் நன்றாக சென்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மாதவி தனது மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவின் அழகை மிஞ்சிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!