என் புருஷனுக்கு சொட்டை தலை தான், அதுக்கு என்ன?.. – மதுபாலா பளீச்..!
Author: Vignesh8 December 2023, 11:15 am
1991 ஆம் ஆண்டு வெளியான பாலச்சந்தர் இயக்கத்தில் அழகன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மதுபாலா. இவர் 90களில் பிரபல நடிகையாக இருந்தார்.
ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன், ரோஜா போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை மதுபாலா திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு அமையா மற்றும் கெயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மதுபாலா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் நான் சினிமாவில் அறிமுகமாகும் போது ஒரு நடிகரை தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது.

தனது கணவர் ஆனந்திற்கு பேண்டஸியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால், அவர் காதலுக்கு உண்மையாக இருப்பார் என்றும், ஒவ்வொரு சண்டையிலும் அவரிடம் நான் எல்லை மீறி பேசினாலும், அதை புரிந்து கொண்டு என்னிடம் சரியாக அணுகுவார். அவருக்கு தலையில் முடி இல்லாதது தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலை சொல்லும் போது கூட அவருக்கு தலையில் முடி இல்லை. ஆனால், அது எனக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை என்று மதுபாலா தெரிவித்துள்ளார்.
