நைட்டியில் போட்டோ போட்ட மகாலட்சுமி.. வில்லங்கமாக கேள்வி கேட்ட நெட்டிசன் : வைரலாகும் பதிவு..!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 1:25 pm

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை விட மிகவும் பெரிதாக பேசப்பட்டது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் – மகாலட்சுமியின் திருமணம்தான். சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியான நிலையில்தான், இருவருக்கும் திருமணமான விஷயமே வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் தான் மகாலக்ஷ்மி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார், பணத்திற்காக தான் இதெல்லாம்.. என பல விமர்சனங்கள் வந்தது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தனியார் செய்தி நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து விளக்கம் கொடுத்தனர்.

இந்த நிலையில், மகாலக்ஷ்மி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் influencer ஆக பல பொருட்களின் விளம்பரங்களை செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நைட்டி பிராண்ட் விளம்பரத்துக்காக தனது படுக்கையறையில் எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார்.

அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்டில் கேட்டிருக்கிறார்கள். ‘எப்போ பேபி பிறக்கும்னு சொல்லுங்க.. அந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!