அடடே.. நம்ம VJ மகாலட்சுமி மகனா இது.. இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!

Author: Vignesh
9 August 2023, 11:30 am

சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதலில் தனது பயணத்தை தொடங்கிய சீரியல் நடிகை மகாலட்சுமி. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். பின்னர் நடிக்க வாய்ப்புகள் வர சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் வரும் அன்பே வா தொடரில் பிஸியாக நடித்துவருகிறார் மகாலட்சுமி.

இதற்கு இடையில் தான் திடீரென தயாரிப்பாளர் ரவீந்தர் மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் வந்தன. அவர்களது திருமணம் ஏதோ பெரிய விஷயம் நடந்தது போல் மக்களால் பெரிதும் பேசப்பட்டு வந்தது, இப்போது அது கொஞ்சம் குறைந்து விட்டது.

vj mahalakshmi -updatenews360.jpg 1

மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போலவே தனது பணிகளை செய்து வருகிறார். இதனிடையே, அழகாக சூப்பரான மேக்கப் போட்டு போட்டோ ஷுட் ஒன்றை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் புகைப்படத்தை மகாலட்சுமி பகிர்ந்திருக்கிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!