சின்னத்திரைக்கு வரும் 90ஸ் கவர்ச்சி கன்னி… உச்சத்தில் எகிறப்போகும் TRP!

Author: Shree
4 November 2023, 3:08 pm

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா.

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கவுள்ளார். ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வர இருக்கிறாராம். இதனால் 90ஸ் கிட்ஸ் குதூகலத்தில் உள்ளனர்.

  • Nithya Menon Kisses Director Mysskin தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
  • Views: - 447

    0

    0